முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் புதிய துணை-ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவியேற்பு : விழாவில் பிரதமர், முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாட்டின் புதிய துணை-ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்க உள்ளார். இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், துணை-ஜனாதிபதியாக அவர் இன்று பதவியேற்க உள்ளார். குடியரசு தலைவர் இல்லத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ‌மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10 மணிக்கு பதவி‌ஏற்பு வி‌ழா நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் ‌செய்து வைக்கிறார். பி‌ரத‌‌மர் மோடி, மற்றும் அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் பழனிசாமியும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பதவியை ராஜினாமா...

துணை-ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற வெங்கையா நாயுடு ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக பதவி வகித்தார். இன்று துணை-ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் நேற்று தனது ராஜ்யசபா பதவியை அவர் ராஜினாமா செய்தார். ராஜ்யசபா தலைவராகவும், துணை-ஜனாதிபதியே செயல்பட வேண்டும். எனவே இப்போது அப்பதவியிலுள்ள ஹமீது அன்சாரியின் ராஜ்யசபா தலைவர் பதவிகாலம் முடிவடைகிறது. அவரிடம், ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வெங்கையா அளித்தார். அதை அவரும் ஒப்புக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து