முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை ஆணையாளர் .அனீஷ் சேகர், ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.97 ஹார்விப்பட்டியில் உள்ள  எஸ்.ஆர்.வி. பூங்காவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தின்  மூலம் பூங்காவை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கூறினார். பாலாஜி நகர் மெயின் ரோடு மற்றும் 4 குறுக்குத் தெருக்களில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணியினை ஆய்வு செய்தார். அப்பகுதியில்   மழைநீர் வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் தேங்கியுள்ளதை பார்வையிட்டு உடனடியாக பாலாஜி நகர் பகுதியில்  தீவிர துப்புரவுப்பணி மேற்கொண்டு   வாய்க்காலினை சுத்தம் செய்து மழைநீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மழைநீர் வாய்க்காலில் யாரேனும் கழிவுநீரை கலக்க விடப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தினால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரிக்கை வைத்தனர். உடனடியாக சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து லாரிகள் மூலம் குடிநீர்; விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வார்டு எண்.98  கர் சீனிவாசா பெருமாள் கோவில் தெரு மற்றும் பசும்பொன் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியினை பார்வையிட்டு சாலையின் நீளம் மற்றும் அகலத்தினை அளந்து ஆய்வு செய்தார். அங்குள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியுள்ள மணலினை உடனடியாக அகற்றுமாறும், வார்டு எண்.97 மற்றும் 98 பகுதிகளில் கொசுமருந்து அடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.  கரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணியினை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.  கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் கட்டிடத்தில் மாநகராட்சி அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளுமாறும் அதுவரை கட்டுமான பணியினை நிறுத்துமாறும் உத்தரவிட்டார். மேலும்                 பழங்காநத்ததில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்களின் வருகைப்பதிவேடு. நோயாளிகளின் வருகை விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து,  மருத்துவமனைக்கு வருகை தரும் கர்ப்பிணி பெண்களை தொடர்ந்து கண்காணித்து  சிகிச்சை வழங்குமாறு மருத்துவரிடம் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்  தி.கௌசலாம்பிகை, செயற்பொறியாளர்  சேகர், உதவிசெயற்பொறியாளர்  ஆரோக்கிய சேவியர், உதவி செயற்பொறியாளர் (திட்டம்)  நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார அலுவலர்  ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர்  சுப்புராஜ், உதவிப்பொறியாளர்  முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து