முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மைக்கான புரோஸ்கார் விருதுபெற்ற அரசு தொடக்கப்பள்ளி

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

திருவாடானை -  தொண்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளி தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக தூய்மைக்கான புரோஸ்கார் விருது பெற்று அசத்தியுள்ளது.
           தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆரம்பித்த பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. மேலும் மாணவ மாணவிகளும் குறைந்த அளவு காணப்பட்டது அதற்கு தனியார் பள்ளிகள் போட்டியாக இருந்து வந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு தூய்மைக்கான புரோஸ்கார் விருதை தொண்டி தொடக்கப்பள்ளி (மேற்கு) பெற்றுள்ளது பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பள்ளிக்கு சென்று பார்த்தால் தனியார் பள்ளிகளை விட சுத்தம் சுகாதாரமாக உள்ளது இதற்கு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி அயராது உழைத்து மாணவர்களிடையே சுத்தமாக இருப்பது தானும் சுத்தமாக இருப்பதோடு பள்ளியை தூய்மையாக வைத்துகொள்ள வேண்ம் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்தியும் காட்டியுள்ளார். பள்ளி வளாகம் முழுவதும் சிறியாநங்கை, துளசி, கற்றாலை போன்ற மூளிகை செடிகளை வளர்த்துள்ளனர். மாணவ மாணவிகள் சாப்பாட்டிற்கு முன்பும் பின்பும் சுத்தமாக கைகழுவ வேண்டும் என்பதற்காக கைகழுவும் இடத்தில் சோப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சுத்தமான கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி சுவற்றி சுத்தம் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளர். பள்ளி முழுவதும் சுற்றி மரங்கள் வளர்த்து சோலையாக வைத்துள்ளனர். புரோஸ்கார் விருது பெற்றதை பற்றி தலைமை ஆசிரியர் சாந்தி குறிப்பிடுகையில் மாவட்ட அளவில் கலந்து கொண்ட பள்ளிகளில் எங்களது பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவில் பல நூறு பள்ளிகள் போட்டியிட்டதில் எமது பள்ளியை தேர்ந்தெடுத்து விருதினை தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.  பள்ளியையும் பள்ளி வளாகத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஏதுவாக மக்கும் குப்பை மட்கா குப்பைக்கென்று தனிதனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மாணவ மாணவிகளுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் வகுப்பரையிலும் தனது சொந்த செலவில் டைல்ஸ் பதித்துள்ளது பள்ளியைச் சுற்றி மூலிகை செடிகளை வளர்த்துள்ளோம் இந்த விருதினை பெற்றதில் எனது பங்களிப்பைவிட மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மற்றும் உறுதுணையாகன இருந்த அணைவருக்கும் இந்த பெருமை சேரும் என்று தெரிவித்தார். புரோகார் விருது பெற்ற பள்ளிக்கும் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் பெற்றோர்கள், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து