முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர சிகிச்சை பிரிவு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 24 மணி நேர சிகிச்சை பிரிவினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
       ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 24 மணிநேரமும் இயங்கும் சிறப்பு பிரிவு தொடக்க விழா கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில்  நடைபெற்றது. இந்த விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் கலந்து கொண்டு 24 மணி நேர சிகிச்சை பிரிவினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பிரிவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோர் அனுமதிக்கப்பட்டு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது. இதில், ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள் நோயாளி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி ரத்தப் பரிசோதனை, எலிசா மற்றும் ரத்த ஆணுக்கள் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்களோடு, கூடுதலாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 5 நபர்கள் வீதம் சுழற்சி முறையில் வாரம் 7 நாட்களில் பணியாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
      மேலும், பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் இதே போன்ற 24 மணிநேரமும் இயங்கும் காய்ச்சல் புற நோயாளிகள் சிறப்பு பிரிவு இன்று முதல் செயல்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இச்சேவையினை நீட்டித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளுக்கு  தான் டாக்டர் என்ற முறையில் முழுமையாக பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசணைகள் வழங்கியதோடு, நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்தார். மேலும், வார்டு வாரியாக சென்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்த கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரன், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜவஹர்லால், ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.ஜெயஜோதி, நகராட்சி என்ஜினீயர் நடராஜன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து