முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.கொத்தங்குடி ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.வழங்கினார்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      கடலூர்
Image Unavailable

சிதம்பரம் தொகுதி சி.கொத்தங்குடி ஊராட்சியில் டெங்கு விழிப்புனர்வு கூட்டம் மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வழங்கினார்.நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேனுகோபால் கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.  நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி பேசுகையில்,  கொசுக்காளால் பரவும் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன் குனியா பொன்ற நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது மருத்துவமனைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகின்றது, மேலும் பொதுமக்களுக்கு நோய் தொடர்பான  விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதி சி.கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொடர்பான விழிப்புனர்ப்பு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசங்கம், கீரப்பாளையம் விநாயகம், புவனகிரி ஜெயசீலன், ஒன்றிய இளைஞரனி செயலாளர் செழியன், முத்தையா நகர் நல சங்க தலைவர் பழனியப்பன், முத்துகுமரன், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   கவரப்பட்டு சுகாதார ஆய்வாளர் ரகுசந்திரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து