நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.30.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர் மட்ட பாலம்: அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      நாமக்கல்
2

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் - ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலம் திறப்பு விழா இன் 08.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று; நடைபெறவுள்ளதை முன்னிட்டு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி , நாமக்கல் கலெக்டர் .மு.ஆசியா மரியம் அவர்களுடன் விழா முன்னேற்பாடு பணிகளை நேரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்ததாவது,

அமைச்சர் பேட்டி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் - ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.30.03 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நாளை 08.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி கலந்து கொண்டு பள்ளிபாளையம் - ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தினை திறந்து வைத்து, வருவாய்த்துறையின் சார்பில் 317 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார்கள்.

இவ்விழாவிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகிக்க உள்ளார்கள். இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர்.வெ.சரோஜா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளார்கள்.

ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , ஈரோடு (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் கே.வி.இராமலிங்கம் , ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் .பொன்.சரஸ்வதி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.

இவ்விழாவில் நாமக்கல் கலெக்டர் .மு.ஆசியா மரியம் வரவேற்புரையாற்ற உள்ளார்கள். சென்னை நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) தலைமைப்பொறியாளர் எம்.கே.செல்வன் நன்றியுரையாற்ற உள்ளார்கள்.இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள், முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள்; கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு வருவாய்க்கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன், நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) உதவி கோட்டப்பொறியாளர்கள் .அகிலா, செல்வக்குமார், உதவி பொறியாளர் செல்வி.க.ராஜலட்சுமி, முன்னால் ஈரோடு மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பெரியார்நகர் இரா.மனோகரன், முன்னால் பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, துணைத்தலைவர் டி.கே.சுப்பிரமணியம், முன்னால் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.செந்தில், அரசு வழக்கறிஞர் சந்திரமோகன் உட்பட முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து