வியாசர்பாடியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் டெங்கு ஒழிப்பு பேரணி

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      சென்னை
perambur

சென்னை வியாசர்பாடியில் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டல அதிகாரிகளுடன் அம்பேத்கார் கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் இணைந்து மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

டெங்கு காய்ச்சல் 

இப்பேரணியை மண்டல அதிகாரி விஜயகுமார், கல்லூரி முதல்வர் பவ்சியா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் மாணவ மாணவிகள் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் டெங்கு கொசுவைபோல் வேடமணிந்தும், பதாகைகளை ஏந்தியும், ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கு கொசுவை ஒழிப்போம், வீட்டை சுத்தமாக வைப்போம், வீட்டின் அருகில் தண்ணீரை தேங்க வைக்கமாட்டோம் போன்ற கோசங்கள் எழுப்பியவாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியபடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி, சத்திய மூர்த்தி நகர் பிரதா சாலை, மகாகவி பாரதி நகர் ஆகிய முக்கிய சாலை வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் பேரணி சென்றனர்.

இதில் மண்டல சுகாதார அதிகாரிகள் பெரியகருப்பன், ப்ரியா மற்றும் துப்புறவு பணியாளர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் ராமச்சந்திரன், மருதாச்சலம் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு எம்.கே.பி நகர் காவல் உதவி ஆணையர் அன்பழகன் உத்திரவின்பேரில் ஆய்வாளர்கள் மோகன்ராஜ், பிரகா~; தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகபாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து