உத்திரமேரூரில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் மாவட்ட செயலாளர் திடீர் ஆய்வு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      காஞ்சிபுரம்
kanchi 1

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

சிறப்பு முகாம்

முகாமில் புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கல் உள்ளிட்டவைகள் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, சோமநாதபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கல் குறித்து கேட்டறிந்தார். இந்த முகாமில் கிராம மக்கள் தானே முன்வந்து தங்களது பெயர்களை சேர்த்தும் தங்கள் குடும்பத்தினரின் பெயர் திருத்தம் நீக்கம் உள்ளிட்டவைகள் செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, மாவட்ட இளைஞரணி நிர்வாகி சசிகுமார், திருவந்தவார் முருகன், துரைபாபு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து