எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டின் மின்சார துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டினை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசிற்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் துணை தலைவர்/ கல்வி திட்டமிடல் மற்றும் சர்வதேச அலுவலர் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகம், உலகளவில் எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வுகளில் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்கிறது. பசுமை எரிசக்தி தொழில்நுட்பம், மின்சார சந்தை அமைப்பு, எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை கொள்கைகள் போன்ற துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார துறையின் எதிர்கால வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் மின்தேவையை குறைந்த செலவில் வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பிற்கு திட்டமிடல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு, மின்கட்டமைப்புக்கு ஏற்ப மின்சார சேமிப்பு அமைப்புகள் மற்றும் மேம்பாடு, மின்சார சந்தை வடிவமைப்பு மற்றும் ஒழுங்குமுறை கொள்கை, மின்தொடரமைப்பு மற்றும் கட்டமைப்பை நவீனமயமாக்கல், காலநிலைக்கேற்ப நெகிழ்வு தன்மையுடன் கூடிய மின்சார அமைப்பு, தமிழ்நாடு மின்சார துறையில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த ஒத்துழைப்பு மூலம் அறிவு பரிமாற்றம், கூட்டு ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க இயலும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இருதரப்பும் இணைந்து தீர்மானிக்கும் தனி ஒப்பந்தங்கள் மூலம் செயல்படுத்தப்படும். இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் பசுமை எரிசக்தி வளர்ச்சிக்கும், மின்சார துறையின் திறன் மேம்பாடு மற்றும் நம்பகமான மின்விநியோகம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


