Idhayam Matrimony

எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 11 மார்ச் 2026      தமிழகம்
Parliament-2024-11-27

புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பெட்ரோலிய அமைச்சர் பதிலளித்தபோது, ‘நமக்கு 72 நாட்களுக்கு போதுமான எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. எல்.பி.ஜி. கையிருப்பும் உள்ளது, எல்.என்.ஜி. பற்றாக்குறையும் இல்லை. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார். 

இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், “வணிக பயன்பாட்டுக்கு எல்.பி.ஜி. சிலிண்டர்களை வழங்க வேண்டாம் என்று எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நிலைமை நாள்தோறும் மோசமாகிறது. மத்திய அரசு நாட்டு மக்களிடம் பொய்களைக் கூறி வருகிறது” என குற்றம் சாட்டினார்.

மற்றொரு காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ், “நாட்டில் சி.என்.ஜி. நெருக்கடி மிகவும் தீவிரமாக உள்ளது. உண்மையான நிலையை அரசு வெளிப்படுத்தவில்லை. பல ஹோட்டல்கள் மற்றும் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால் ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் நிலைமை தீவிரமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது” என குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து