Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்

புதன்கிழமை, 11 மார்ச் 2026      தமிழகம்
vijay 2025-10-09

சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. 

தேர்தல் நேரத்தில் அடிக்கடி டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை செல்வதால் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்ய முடியவில்லை என்றும் ஆகவே தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆவதற்கு தடை விதிக்க நடிகர் விஜய் நீதிமன்றம் செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தேர்தல் பரப்புரை மற்றும் அரசியல் பணிகளைக் காரணம்காட்டி, நேரில் ஆஜராவதிலிருந்து 15 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை சி.பி.ஐ. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, தொடர்ந்து சம்மன் அனுப்பினால், விஜய் நீதிமன்றத்தை அணுகி தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அல்லது சம்மனை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் விஜய் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து