Idhayam Matrimony

ஈரான் போர் குறித்து ட்ரம்ப் - புதின் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      உலகம்
Trump-Putin 2024-11-11

மாஸ்கோ, ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படை தளங்கள் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளை தாக்கி வருகின்றது. ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல்கள் நடைபெற்று வரும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புளோரிடாவில் திங்கள்கிழமை செய்தியளர்களை சந்தித்த ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையின் போது, ஈரான் போர், உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமாக சூழல் குறித்து இரு தலைவர்களும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்ததாவது: “ரஷ்யா - உக்ரைன் இடையிலான நீண்டகால மோதல் குறித்து பேசினோம். புதினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உறவு தொடர்ந்து பதட்டமானதாகவே இருக்கின்றன. ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டுவர புதிய உதவி செய்ய விரும்புகிறார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் கவனம் செலுத்த புதினிடம் வலியுறுத்தினேன்.” எனத் தெரிவித்தார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு முதல்முறையாக ட்ரம்ப்பும் புதினும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து