சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தினை முன்னிட்டுவிழிப்புணர்வு பேரணி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      தஞ்சாவூர்
Thanjai 2017 10 13

 

தஞ்சாவூர் ரயிலடி நிலையத்திலிருந்து சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று(13.10.2017) தொடங்கி வைத்தார்.

 மாணவ,மாணவியர்

 இப்பேரணி ரயிலடியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் சென்றடைந்தது. இப்பேரணியில் 250 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள், தனியார் மருத்துவமனை செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

 பேரணியின் போது மழை மற்றும் வெள்ளம் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, வெள்ளம் வருவதற்கான அறிவிப்புகள் வந்தவுடன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பேரிடர் மற்றும் வெள்ளக் காலங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், தீ தடுப்பு பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி ஆணையர் டெங்கு குறித்து சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வரதராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், செஞ்சிலுவை சங்க தலைவர் ராஜமாணிக்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து