கோத்தகிரி பகுதியில் ரூ.34.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      நீலகிரி
24ooty-1

கோத்தகிரி பகுதியில் நடைபெற்று வரும் ரூ.34.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

அப்போது நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.10.00 மதிப்பில் முடிக்கப்பட்ட 550 மீட்டர் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணியினையும், கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் நகர், நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் தாய் திட்டத்தின் கீழ் நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட ஓடந்தொரை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடைபாதை பணியினையும், சன்சைன் நகர் பகுதியில் ரூ.7.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட 167 மீட்டர் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணியினையும், கோத்தகிரி கேர்பென் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.00 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்பணியினையும், தாத்தநாடு பகுதியில் ரூ.4.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை பணியினையும், கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கன்னேரி முக்கு நினைவு பூங்கா பகுதியில் ரூ.5.00 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் பணியினையும், கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் பணியினையும் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் என். மேகநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஜெயபிரகாஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து