ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு. முருகன் கூட்டுறவுச் சங்கங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      ஈரோடு
021

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு. முருகன்  23.10.2017 அன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரம், சித்தோடு, நசியனூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், மற்றும் ஈரோடு நிதியுதவி பெறும் கல்விநிறுவன பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஆகிய சங்கங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சங்கங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சாம்பல் அல்லது பிளிச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும்.  உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்கமால் அகற்றிட வேண்டும்.
உபயோகப்படாத பொருட்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும்.  ஆரம்ப சுகாதார நிலையத்தினை அணுகி சங்கத்திற்கு உட்புறம், வெளிப்புறம் புகைமருந்து அடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இவ்வாய்வின்போது ஈரோடு கூட்டுறவு சார்பதிவாளர்ஃகள அலுவலர் க.  விஜயன் , ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் மு.பா. பாலாஜி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து