நாமக்கல் மாவட்ட த்தில் கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      நாமக்கல்
2

 

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (31.10.2017) நடைபெற்றது.

தேசிய ஒற்றுமை நாள்

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியான "இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்" என்ற உறுதிமொழியினை வாசிக்க அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி அவர்கள், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்சிலி ராஜ்குமார் அவர்கள், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் அவர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து