ஊட்டியில் தேசிய ஒற்றுமை நாள் ஓட்டம்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      நீலகிரி
31ooty-2

ஊட்டியில் நேற்று நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் ஓட்டத்தை
மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பிஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவ, மாணவியர்

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் தேசிய ஒற்றுமை நாள் ஓட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. அரசு தாவரவியல் பூங்கா முன்பிருந்து துவங்கிய பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.  இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடினர். இப்பந்தயமானது கார்டன் சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, ஏ.டி.சி எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ் வழியாக மீண்டும் கார்டன் சாலை வழியாக புறப்பட்ட இடத்தை அடைந்தது.

இந்நிகழ்ச்சியில் துணை கண்காணிப்பாளர் திருமேனி, ஆய்வாளர்கள் ஜான்(சிறப்பு பிரிவு), ரவீந்திரன்(பி_1),வினாயகம்(இ_1), நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக்குழு தலைவர் கிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பந்தய முடிவில் அனைவரும் சேர்ந்து தேசிய ஒற்றுமை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து