காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஊழல் ஒழிப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      சிவகங்கை
5 siva news 0

காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டமும், இந்தியன் வங்கியும் (அழகப்பா கல்லூரிவளாகக் கிளை) இணைந்து “எனதுநோக்கு - ஊழலற்ற இந்தியா” என்னும் பொருண்மையில் நடத்திய ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுவார சிறப்பு நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றுகையில், மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய அளவிலான தரமதிப்பீடு 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி இந்திய அளவில் 32 மாநில பல்கலைக்கழகங்கள் மேம்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான தகுதியை பெற விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளன. இவற்றில் அழகப்பா பல்கலைக்கழகமும் ஒன்று.  அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் யூ தகுதிபெற்ற ஒரே பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். ரூசாநிதியுதவி திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்ட (ஐஐ Phயளந) வளர்ச்சி நிதி பெறுவதற்கு அழகப்பாபல்கலைக்கழகம் தகுதி பெற்றுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கல்வியோடு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. “ஒருவருக்குரிய வாய்ப்புகள் மறுக்கப்படாமல் கிடைக்கச் செய்வதும் கூட ஒருவகையில் ஊழலற்ற நடைமுறையை எடுத்துக்காட்டும்” என்றார். தனக்கு அளிக்கப்பட்டபணியை செய்யாமல் இருப்பது கூட ஒருவகை ஊழலே ஆகும். களவு மட்டுமன்றி பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவது, நேர்மையற்ற செயல், சுரண்டலில் ஈடுபடுதல் மற்றும் மற்றமுறைகேடுகளில் ஈடுபடுவதும் ஊழலின் ஒரு வெளிப்பாடே ஆகும்.  
இந்நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைகாவல் கண்காணிப்பாளர் திரு. ஆர்.ரகுபதி அவர்கள் தமது முக்கிய உரையில் உலகளவில், குறிப்பாக இந்திய அளவில், ஊழல் நடைபெறுவதை தடுக்கவேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தியாவில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஊழல் தடுப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.  ஊழல் தடுப்பு துறையினர் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும், ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் ஊழலை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். பெறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே அதுதொடர்பான மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.  ஊழல் தடுப்புதுறையினருக்கு புகார் அல்லது தகவல் அளிக்கும் பொதுமக்கள் பற்றிய விவரங்கள் மிகரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். பொதுமக்கள் ஊழல் பற்றிய விவரங்களை தன்னிச்சையாக முன்வந்து தெரிவிக்கும் போதுதான், நாட்டில் நடைபெறும் ஊழல்களை முழுமையாக ஒழிக்க முடியும். நாடுவளம்பெற ஒவ்வொருவரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முன்வரவேண்டும். நம் நாடு ஊழல் அற்ற நாடாக உருவாவதற்கு நாம் அனைவரும் இணைந்து ஊழலை ஒழிக்கபாடு படவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்தியன் வங்கி மதுரை மண்டலமேலாளர் திரு. சி. புhரதி அவர்கள் தம் உரையில், அரசு நிறுவனங்களையும், பொதுநல ஊழியர்களையும் கண்காணிப்பதற்காக ஊழல் ஒழிப்புத் துறைசெயல்பட்டு வருகிறது.  நம் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் குறைவாக ஊழல் நடைபெறும்  துறைகளில் ஒன்றாகவங்கித்துறை விளங்குகிறது.  எது நல்லது, எதுகெட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தியத் தலைவர்களான காமராசர், மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினர்.  அவர்களுடைய வாழ்க்கை நம் அனைவருக்கும் உதாரணமாகும்.  அவர்களை போல நாமும் நேர்மையானவர்களாக திகழ வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அழகப்பாபல்கலைக்கழக கணிதவியல் துறை, திறன் மேம்பாட்டுமையம், கல்வியியல் கல்லூரி மாணவ-மாணவியாகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாட்டுநலப் பணித் திட்டஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் அனைவரையும் வரவேற்றார்.  இந்தியன் வங்கி அழகப்பாகல்லூரிவளாக கிளை முதுநிலைமேலாளர் திரு. டி. செல்வம் நன்றி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து