முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவூர் ஸ்ரீதிருவகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஆவூரில் அமைந்துள்ள ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீதிருவகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மகா கும்பாபிஷேகம்

விழுப்புரம் திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டர் உள்ளது ஆவூர். இது சோழர் காலத்தில் (கிபி 985-1014) கட்டப்பட்ட கோவில் ஆகும். ஆவூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீதிருவகத்தீஸ்வரர் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையட்டி

செவ்வாய் அன்று இரவு 7 மணிக்கு முதல்கால யாகசாலை வேள்வி பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு புத சுத்தி, பூர்யாஹீதி தீபாரதனை, விமானக் கலசம் நிறுவுதல், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும், 6 மணிக்கு அஷ்டபந்த மருந்து சாற்றுதல் தீபாரதனையும் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு காப்பணிவித்தல், திருச்சுற்றுத் தெய்வங்கள் திருக்குட நன்னீராட்டும், 7 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், வேள்வி நிறைவும், 8 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சு.மோகசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சு.தேவராஜ், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பா.நந்தகுமார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மூலவர் ஸ்ரீதிருவகதீஸ்வரர், ஸ்ரீஆனந்தவல்லி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், நவக்கிரக சுவாமிகள் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டப்பந்தன மஹாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் மஹா தீபராதனையும் நடைபெற்றது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்பு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து