தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணி கலெக்டர் என்.வெங்கடேஷ் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      தூத்துக்குடி
tutycorin collector

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முத்துகிருஷ்ணாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர்என்.வெங்கடேஷ் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அல்பிஜாண்வர்க்கீஸ், ஆகியோர் செய்தார்கள். கலெக்டர்என்.வெங்கடேஷ் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில், சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, கொசு ஒழிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் தங்களது பகுதிகளில் தீவிர கள ஆய்வு மற்றும் தொடர் தணிக்கை செய்து, தங்கள் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க துரிதமாக செயல்பட வேண்டும். குறிப்பாக பொது மக்கள் வெளியூர் செல்லும் போது தங்கள் வீடுகளில் நல்ல நீரினை சேமித்து வைக்க கூடாது. வீடுகளின் சுற்றுப்புறத்திலும் நல்ல நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதோடு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தயார் நிலையில்

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சுய வைத்தியம் செய்யாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று அதற்கான உரிய சிகிச்சை பெற வேண்டும். அனைத்து  அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அனைத்துவகையான காய்ச்சல்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொது மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். - என கலெக்டர்என்.வெங்கடேஷ் தெரிவித்தார்கள்.அதனைதொடர்ந்து, கலெக்டர்என்.வெங்கடேஷ் தலைமையில், மரம் வளர்ப்போம் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறித்த  ஆய்வுக் கூட்டம், அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன், கலெக்டர்அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன், மாவட்ட ஊரகவளர்;ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து