முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள தனியார் குடியிருப்பு மற்றும் பல்வேறு இடங்ககளை கலெக்டர் இல.நிர்மல் ராஜ் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் நகராட்சிகுட்பட்ட 22 வது வார்டு வண்டிக்காரத்தெரு, புதுத்தெரு,மானந்தியார் தெரு ஆகிய இடங்களில் தனியார் குடியிருப்பு கட்டடங்களின் மேல்பகுதிகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ளதா எனவும்,தேவையற்ற பொருட்கள் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளனவா எனவும் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து புதுத்தெருவில் தனியார் கட்டட மேல்பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலையில் இருந்ததால் கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது... வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரைப்படி திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகள் களப்பணியாளர்கள் மற்றும் மண்டல அளவிலான அலுவலர்கள் மூலம் விரைவாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த தூய்மையற்ற இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2953 நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தேவையற்ற டயர்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக மேல்நிலை தண்ணீர் தொட்டிகளை கொசுவலையுடன் மூடியிட்டு மூடி வைக்க வேண்டும்.கட்டட மேல்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் காய்ச்சல் என்றாலே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று இரத்த பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் மரு.செந்தில்குமார். நகராட்சி ஆணையர் காந்திராஜன் , துணை கலெக்டர் (பயற்சி) செல்வி. ஜெயபிரதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து