மனிதர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் அப்பா, அம்மாவை தினமும் வணங்க வேண்டும் விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் பேச்சு

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      தூத்துக்குடி

மனிதர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் அப்பா, அம்மாவை தினமும் வணங்க வேண்டும். வெ ளியில் செல்லும் போது நெற்றியில் திருநீரோ, குங்குமமோ அணிந்து சென்றால் அகால மரணத்திற்கு வாய்ப்பே கிடையாது என்று துாத்துக்குடியில் விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் தெரிவித்தார்.

சொற்பொழிவு

துாத்துக்குடியில் விட்டல் தாஸ் மகராஜ் சுவாமிகளின் பாண்டுரங்கன் கதை குறித்த பக்தி சொற்பொழிவு மற்றும் பஜனை துவங்கியது. சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பஜனை சொற்பொழிவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் பேசுகையில் கூறியதாவது;

இன்றைக்கு இரண்டு மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வம்புகதை தான் அதில் அதிகமாக இருக்கிறது. அதுவும் அடுத்தவரை பற்றி பேசுவதில் அதிக சுகம். அதனை தான் பேசுகின்றனர். அப்படி பேசுவதை விடுத்து கோவிந்தா என்று சொன்னால் மனமும் சுகப்படும். நல்ல துாக்கமும் வரும்.கஷ்டம் வந்தால் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லக் கூடாது. பகவானிடம் நமது கஷ்டத்தை சொன்னால் மட்டும் தான் தீர்வு கிடைக்கும். கஷ்டமும் நீங்கும். மனைவி, குழந்தைகளிடம் கூட கஷ்டத்தை சொல்ல கூடாது. நண்பரிடம் சொல்லலாம். பகவானை நண்பராக நினைத்து சொல்லிவிட்டால் கஷ்டம் தானாக நீங்கி விடும். அறைக்கதவை சாத்திவிட்டு நம் கஷ்டத்தை மனசார நினைக்காமல் வாய்விட்டு பகவானிடம் சொல்ல வேண்டும். கடவுளிடம் நாம் வாய்விட்டு கஷ்டத்தை சொன்னால் நிச்சயமாக அந்த கஷ்டம் தீரும். பட்டம், பதவி தேவையில்லை. கஷ்டம் நீங்கினால் போதும் என்று பகவானை தரிசிக்க வேண்டும். இறைவனை வழிபடுவதற்கு சாஸ்திரங்கள் ஐந்து வகையான பக்திகளை சொல்லி இருக்கிறது. சம்மந்தம் இருந்தால் தான் உறவு வரும். இதனால் இறைவனை மனதார நினைத்து வணங்க வேண்டும். நமக்கு உறவு இருந்தால் தான் அதன் மேல் அதிகமான பிடிப்பு வரும். நாம் யாரோ, இறைவன் யாரோ என்று இருக்காமல் பிடிப்புடன் இறைவனை வழிபட வேண்டும்.இன்றைக்கு ஜோதிடர் சொன்னால் தான் கோயிலுக்கே போகின்றனர். அந்த அளவிற்கு நிலமை இருக்கிறது. அப்படி இருக்க கூடாது. கஷ்டம் நீங்கனும் என்பதற்காக மட்டும் தான் கோயிலுக்கு செல்கின்றனர். அப்படி இருக்க கூடாது. பக்தி என்பது உண்மையான அன்பு.

வணங்க வேண்டும்

இறைவனை பிடித்திருப்பதை இன்னும் திடமாக பிடிக்கத்தான் இதுபோன்று சொற்பொழிவு மூலம் கதைகள் சொல்கிறோம். சிறந்த பக்தி மதுர பக்தி என்னும் பிரம்ம பக்தி தான். தெய்வத்தை நாயகனாக நினைக்கும் பக்தி இது. நம்மால் நிச்சயமாக ஐந்தில் மூன்று பக்திகளை மிக எளிதாக கடைபிடிக்க முடியும். அதுவும் இறைவனை நண்பராக நினைக்கும் பக்தி நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும்.பத்து பேர் நம்மை சுற்றி இருக்கிறார் என்று நினைக்க கூடாது. கஷ்டம் வந்தால் மூளை வேலை செய்யாது. நல்ல காலத்தில் மட்டும் தான் நமக்கு மூளை வேலை செய்யும். காலத்துக்கு தான் புத்தி வேலை செய்யும். உடம்பை நம்ப முடியாது. யாரையும் நம்ப கூடாது. பகவானை மட்டும் தான் நம்ப வேண்டும். அன்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும். நம்பிக்கை பகவானிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அப்பா, அம்மா புண்ணியம் செய்தால் பிறக்கும்.வசதி இருந்தால் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. அப்பா, அம்மாவை வணங்கி அவர்களை நல்ல படியாக வைத்திருந்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும். குழந்தைகள் கட்டாயம் அப்பா, அம்மாவை வணங்க வேண்டும். அதே போல் வெ ளியில் செல்லும் போது கட்டாயம் திருநீறோ, குங்குமமோ ஏதாவது நெற்றியில் அணிந்து செல்ல வேண்டும். நெத்தியில் குங்குமமோ, விபூதியோ பூசிச் சென்றால் அகால மரணம் வரவே, வராது. அப்பா, அம்மாவை குழந்தைகள் கட்டாயம் நமஸ்காரம் செய்ய வேண்டும் இவ்வாறு விட்டல்தாஸ் சுவாமிகள் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து