எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே இருந்தது, அவருடைய வழியை பின்பற்றி புரட்சித் தலைவி அம்மா ஏழை, ஏளிய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தார்கள்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவரை பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதன் தொடக்கவிழா கடந்த 30.06.2017 அன்று மதுரை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 22.07.2017 அன்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 29.07.2017 அன்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் 05.08.2017 அன்றும், விழுப்புரம் மாவட்டத்தில் 09.08.2017 அன்றும், கடலூர் மாவட்டத்தில் 16.08.2017 அன்றும், திருவாரூர் மாவட்டத்தில் 19.08.2017 அன்றும், அரியலூர் மாவட்டத்தில் 23.08.2017 அன்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30.08.2017 அன்றும், திருவள்ளுர் மாவட்டத்தில் 03.09.2017 அன்றும், ஈரோடு மாவட்டத்தில் 06.09.2017 அன்றும், வேலூர் மாவட்டத்தில் 09.09.2017 அன்றும், நாமக்கல் மாவட்டத்தில் 17.09.2017 அன்றும், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 20.09.2017 அன்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23.09.2017 அன்றும், சேலம் மாவட்டத்தில் 30.09.2017 அன்றும், கரூர் மாவட்டத்தில் 4.10.2017 அன்றும், தருமபுரி மாவட்டத்தில் 7.10.2017 அன்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 14.10.2017 அன்றும், விருதுநகர் மாவட்டத்தில் 23.10.2017 அன்றும், திருச்சாரப்பள்ளி மாவட்டத்தில் 26.10.2017 அன்றும், தேனி மாவட்டத்தில் 9.11.2017 அன்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் 12.11.2017 அன்றும், மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் 18.11.2017 ஆகிய நாட்களில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்றப்பணிகளை துவக்கி வைத்தும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறும் மாவட்டங்களில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் மற்றும் அரசியல் மூலம் ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், எம்.ஜி.ஆர். பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டுள்ளன.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம், அரசினர் தொழிங்பயிற்சி நிலைய வளாகத்தில், பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா 22.11.2017 புதன்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி பங்கேற்று பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூபாய் 380.94 கோடி மதிப்பிலான 214 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூபாய் 8.08 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 31610 பயனாளிகளுக்கு ரூபாய் 155.12 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்கள்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கவும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கவும், மக்களவை துணைத் தலைவர் டாக்டர்.மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றவும், மேலும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ முன்னிலை வகிப்பார்கள். இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி புதுடெல்லி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி;, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன்;, மற்றும் வாரியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுவார்கள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ். நன்றியுரையாற்றுவார்கள்.பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை புரட்சித் தலைவர் அவர்களின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சர் பெருமக்கள், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


