முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயலூக்கச் செயல்பாடு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

எண்ணியது முடிக்கும் உறுதியே செயலூக்கச் செயல்பாடாகிறது. மகிழ்ச்சி தவழும் வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் திறவுகோல் செயலூக்கமுள்ள செயல்பாடே! அதற்கு இரு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று மனம் சார்ந்தது; அது நமது மனத் துடன் தொடர்புடையது. நாம் எங்கு செல்ல விரும்புகிறோம்? என்ன செய்ய விரும்பு கிறோம்? என்பதை எடுத்துரைக்கிறது. மற்றது செயலோடு தொடர்புடையது. அது நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. விரும்பியதை வெற்றிகொள்ளச் செய்கிறது. செயலூக்கம்மிக்க மனிதர்கள் தங்களது இலட்சியங்களைத் தீர்மானித்துக்கொண்டு அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரும்பாடுபடுகின்றனர்.

செயலூக்கச் செயல்பாட்டைச் செய்ய வேண்டும் என்றால், ஒருவருக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். செயலூக்கத்தின் முக்கிய அம்சம், தன்னையே நம்புதலாகும். தன்னையே நம்புதல் வெற்றிகரமான செயலூக்கத்தின் அடித்தள மாகும். தன்னை நம்புவது நேர்முறை மனோபாவத்தை உருவாக்கிக்கொள்ள உத வும். தம்மை நம்புவதும், பிறரை நம்புவதும், இறைவனை நம்புவதும் மலையைப் பெயர்க்கும் ஆற்றலை வழங்கும் நாம் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், மகிழ்ச்சியாக வாழ நினைத்தால், வெற்றிபெற எண்ணினால், புதிய சாதனைகளைப் படைக்க முனைந்தால், ‘என்னால் முடியாது’ எனத் தோன்றுவதையும் ‘முடித்தே தீரவேண்டும்’ என நம்பினால், நம்மில் செயலூக்கம் உந்துசக்தியாகச் செயல்பட வேண்டும்.

உலகறிந்த மகத்தான விஞ்ஞானி எடிசன், உறுதியான தன்னம்பிக்கை கொண்டவர். தம்முடைய ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோருடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லை. அதனால் பாதியிலேயே படிப்பைக் கைவிட நேர்ந்தது. நான்காவது வகுப்பு வரை முறையான பள்ளிப்பாடம் பயின்றார். ஆயினும் சுய கல்வி கற்றார். இயற்பியல், வேதியியல், விவிலியம் ஆகிய நூல்களைத் தாமாக வாசிப்பார். தம்முடைய வீட்டிலேயே ஓர் ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார். பணப்பிரச்சனைகள் காரணமாக எடிசன் எப்போதுமே ஏதோ ஒரு படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருப்பார். சுயமான செயல் நோக்கம் கொண்டிருந்த காரணத்தால் அவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக உருவாக முடிந்தது.

தாமஸ் எடிசனின் நண்பர் ஒருவர் அவருடைய ஆய்வுகளின் வெற்றிகளைப் பற்றி விவாதித்தார். தாமஸ் எடிசன் தாம் தொடர்ந்து முயற்சி செய்த ஆய்வுகளில் தோல்வியடைந்தவை 50,000 என விளக்கினார். புதிய சேமிப்பு மின்கலன் கண்ட றிந்த அனுபவம் பற்றித்தான் அவர் சொன்னார். “வெற்றிகள்;” “ஏனய்யா”, ஏராள மான வெற்றிகள் என்னிடம் உள்ளன. 50,000 செயல்முறைகள் செயல்படாதவை என்று நான் அறிந்துகொண்டதே எனக்கு வெற்றிதானே!”

செயலூக்கத்தை மேம்படுத்த வழிமுறைகள் :  தமது வாழ்க்கை இலட்சியங்களை வரையறுத்துக்கொள்ளுதல்; அவற்றில் முன்னுரிமை வழங்குவதற்கு உரியவற்றை முறைப்படுத்துதல்; ஒருநாள் குறித்துக் கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய முயற்சி செய்தல்.

தாம் அடைய விரும்பும் இலட்சியத்துக்கான படிகள் எவையென நிர்ண யித்துக் கொண்டு அவற்றை அடைய முனைதல்.

இலட்சியங்களை அடைவதற்கான நண்பண்புகளைப் பட்டியலிடுதல்,

இலட்சியங்களை அடைவதற்குத் தமக்குத் தேவையான நற்பண்புகளைப் பட்டியலிடுதல்,

எதிர்மறைக் குணங்களைக் கடந்து செல்லல்.

நம்மை உள்ளிட்ட எல்லாவற்றைப் பற்றியும் நல்லதே நடக்கும் என நம்புதல்.

சிறந்ததை எதிர்நோக்குதல்;; சிறந்ததைச் செய்தல்,

குறிப்பிட்டதொரு இலட்சியத்தின் மீதே நாட்டத்தைக் குவியப்படுத்துதல்;; அதனை நிறைவு செய்வதாக மனக்கண்ணில் காணுதல்,

முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்கில் காணல்,

இலட்சியத்தை அடைவதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருத்தல்,

தம் மீது நம்பிக்கை கொள்ளல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து