முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் எம்எல்ஏ தலைமையில் இனிப்பு கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      வேலூர்
Image Unavailable

Source: reuters

அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி தலைமையில் இரண்டு கிமீ தூரத்திற்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியபடியும் மாபெரும் பேரணி நேற்று நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு. மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் பொது செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பின் தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் இரட்டைஇலை சின்னம் முடக்கபட்டது.

கொண்டாட்டம்

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்குதான் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனையடுத்து வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் வெற்றி கொண்டாட்டமாக அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எம்எல்ஏ அலுவலகத்தில் திரண்டதால் அந்த இடம் களைகட்டியது. பின்னர், எம்எல்ஏ சு.ரவி தலைமையில் பிரமாண்ட பேரணி துவங்கியது. நகர செயலாளர் துரைகுப்புசாமி, ஒன்றிய செயலாளர் பால்ராஜ்சீனிவாசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் பிரகாஷ், மாவட்ட பாசறை துணை தலைவர் ஷியாம்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஏஎம்.நாகராஜன், ஓஜெ.பார்த்சாரதி, சாந்தி, மற்றும் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், ஜெபி.பழனி, காமராஜ், பொன் பார்த்திபன், பாபு, சரவணன், மல்லிகா, மற்றும் ஆர்.கண்பத், ஜெய்சங்கர், குகன், ஈ.மாணிக்கவேலு, சீதாலட்சுமி, கோவிந்தராஜ், பூக்கடை முனசாமி, பா.நரசிம்மன், எம்ஜிஆர்.ரவி, கருணாகரன், பாண்டியன், பாளையம், அரக்கோணம் ஒன்றியம் தணிகை ஜிஎம்.மூர்த்தி, கைனூர் வாசு, பெருமூச்சி நரேஷ்காந்த், முருங்கை சசிகுமார், மோசூர் ராஜேஷ், அம்மனூர் சீனிவாசன், டைலர்அரி, உள்ளிட்ட திரளானவர்களும் உடன் சென்றனர்.

பேரணி, பழனிபேட்டை, இரட்டை கண்பாலம், மார்கெட், பழைய கோர்ட், பழைய பேருந்து நிலையம் சுவால் பேட்டை வழியாக தாலுக்கா அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பேரணி இறுதியில் எம்எல்ஏ சு.ரவி பேசியதாவது. உண்மையான அதிமுக அணி என்பதற்;காவும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி. இனி புரட்சித்தலைவி அம்மா என்றும் நம்முடன் இருக்கிறார் என்பதை பறைசாட்டும் வெற்றி ஆகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து