முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொடிநாள் வசூல் இலக்கு ரூ.41லட்சம்-கலெக்டர் தகவல்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் இலக்கு ரூ.4 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாராளமாக நிதிஉதவி அளித்து முன்னாள் படைவீரர்களின் நலன்காக்க உதவிடுமாறு கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து விழா மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  இவ்விழாவில் 8 பயனாளிகளுக்கு ரூ97,239 மதிப்பிலான கல்வி உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். முப்படை வீhர் வாரிய உபதலைவர் லெப்.கர்ணல்.எஸ்.ஷேக் அப்துல் காதர் தமிழக ஆளுநர்pன் கொடி நாள் செய்தியினை வாசித்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-  ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்திட தனது இன்னுயிரையும் துச்சமாக மதித்து கடலிலும்,  வானிலும்இ பனி மூடிய மலைகளிலும் கண் துஞ்சாது கடமையாற்றிவரும் முப்படைவீரர்களை போற்றி பாராட்டி அவர்களது வீரச் செயல்களை நினைவு கூர்ந்து நன்றி கூறுவது ஒவ்வொருவரின் கடமையாகும். 
        நாட்டுப் பாதுகாப்பிற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் படைவீரர்களின் மறுவாழ்விற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் போரில் வீரமரணம் எய்திய படைவீரரின் குடும்பத்தினருக்கும் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கும்  பொதுமக்கள் மனமுவந்து அளிக்கும் கொடிநாள் நிதி நன்கொடைகள் நல்ல பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
        7.12.2016 முதல் 6.12.2017 உடன் முடிவடைந்த 2016-ம் ஆண்டு கொடிநாள் வசூலிற்கு அரசு நிர்ணயித்த இலக்கு ரூ.37லட்சத்து 34ஆயிரத்து 500 ஆகும்.  இதில்  6.12.2017 முடிய  வசூல்  செய்யப்பட்ட தொகை ரூ.44லட்சத்து 22ஆயிரம் ஆகும். இந்த சீரிய பணியில்  நமது மாவட்ட அரசு அலுவலர்கள் ஆர்வத்துடனும் சீர்மிகு முயற்சியுடனும் ஈடுபட்டு கொடிநாள் வசூலினை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்து சாதனை புரிந்துள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் வரவிருக்கும் கொடிநாள் 2017 ஆம் ஆண்டுக்கு (7.12.2017 முதல் 6.12.2018முடிய)  இம்மாவட்டத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ரூ.41லட்சத்து 8ஆயிரம் ஆகும். இவ்வாண்டும் படைவீரர் கொடிநாள் வசூலில் இதைப்போன்று ஆர்வத்துடனும் சீரிய முயற்சியுடனும் ஒத்துழைத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை காட்டிலும் கூடுதலாக வசூல் செய்திட அனைத்து அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக, நடப்பாண்டில் 2-ஆம் உலகப்போர் நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி நிதியுதவி, போர்ப்பணியில் ஊக்க மானியம் என 107 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9லட்சத்து 66 ஆயிரத்து 327 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள்இ இணையதளம் மூலமாகவோ இதங்கள் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிலோ  மற்றும் இத்துறை மூலம் நடத்தப்படும் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
       மேலும் இந்த இனிய நாளில் பங்கேற்று இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தமைக்கு அனைத்து முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தார்களுக்கும் எனது நன்றியினை  தெரிவித்துக் கொள்வதுடன் வரும் புத்தாண்டில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு பேசினார். இதனை தொடர்ந்து, 8 நபர்களுக்கு ரூ.97ஆயிரத்து 239 மதிப்பிலான கல்வி உதவித் தொகையினை  கலெக்டர் வழங்கினார். இந்த விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, கால்நடைப்பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட தொழில்மைய மேலாளர் ப.மாரியம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குநர் ச.மணிவண்ணன், கமாண்டர் வி.வைத்தியநாதன்,நல அமைப்பாளர் எச்.சாகுல்ஹமீது உட்பட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து