கிருஷ்ணகிரி ஒன்றியம் இட்டிக்கல்அகரம், பாலகுறி ஊராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      கிருஷ்ணகிரி
3

கிருஷ்ணகிரி ஒன்றியம் இட்டிக்கல்அகரம் மற்றும் பாலகுறி ஊராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 08.12.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பாலகுறி கிராமத்தில் சிக்கன் பாஸ்ட்புட் கடையில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தியதையடுத்து அக் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் இயங்கி வரும் டாபா ஒட்டல்கள் மற்றும் மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அலுவலர்களுக்கு உத்தரவு

முன்னதாக இட்டிக்கல் அகரம் கிராமத்தில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துழை கிணறு மற்றும் 1069 மீட்டர் தூரத்திற்கு பைப்லைன் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், மேல்கொட்டாய் கிராமத்தில் ரூ. 3.25 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆழ்துழை கிணறு மற்றும் சின்டக்ஸ் டேக் பணிகளையும், தொடர்ந்து பாலகுறி ஊராட்சியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துறை கிணறு மற்றும் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ள பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து சிக்கபூவத்தி கிராமத்தில் இருளர் காலணியில் 30 - குடியிருப்புகளில் போதிய நிதி ஆதாரங்களை கொண்டு விரைவில் மேற்கூரைகள் சீரமைக்கவும் அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.இவ்வாய்வின் போது உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரசன்னா மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து