ரஜினிகாந்த் 68வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம்

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      வேலூர்
wj

 

ரஜினிகாந்த் 68வது பிறந்தநாள் முன்னிட்டு வாலாஜா நகரமன்ற ரஜினி ரசிகர்மன்றம் சார்பில் மாபெரும் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகர ரஜினி ரசிகர்மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாள் முன்னிட்டு அனைக்கட்டு ரோட்டில் அமைந்திருக்கும் அருள்மிகு சுந்தரவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இரத்ததானம் முகாம்

மேலும் இதனை தொடர்ந்து நேற்று காலை வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட பிரதிநிதி முஹம்மத் கலீபா தலைமை தாங்கினார். நகரதலைவர் சிவகிருஷ்ணா, நகரசெயலாளர் கரீம், நகர பொருளாளர் தருமா சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி தனசேகர் அனைவரையும் வரவேற்றார். முகாமில் ரஜினிரசிகர்கள் பொதுமக்கள் இளைஞர் என பலர் இரத்ததானம் செய்தனர். மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ரொட்டி, பால், இளநீர் போன்ற ஆகாரங்களை வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து வாலாஜா பேருந்து நிலையத்தில் மதியம் 1மணியளவில் 1000பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6மணியளவில் 68கிலோவில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் நெடுஞ்செழியன், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர நிர்வாகி குமரேசன் நன்றி கூறினார்.

 

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து