அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டை. தென்காசியில் சிறப்பான வரவேற்பு

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      திருநெல்வேலி
abarana petti coming

செங்கோட்டை, தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஐயப்பனின் திருஆபரணப் பெட்டிக்கு; சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருஆபரணப் பெட்டி

 கேரளமாநிலம் அச்சன்கோவில் அரசன் ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகோற்சவ திருவிழா இன்று (16ம் தேதி) துவங்குகிறது. இத்திருவிழாவின் போது ஐயப்பனுக்கு திருஆபரணங்கள் அணிவித்து பூஜை வழிபாடு நடைபெறும்.  ஐயப்பனின் திருஆபரணங்கள் அடங்கிய திருஆபரணப் பெட்டி புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மகோற்சவ விழாவிற்காக இத்திருஆபரணப் பெட்டி நேற்று (15ம் தேதி) புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டு சிறப்பு வாகனம் மூலம் திருஆபரணப்பெட்டி புளியரை, செங்கோட்டை, தென்காசி, பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.செல்லும் வழியில் செங்கோட்டை மற்றும் தென்காசி காசிவிசுவநாதர் கோவில் முன் திருஆபரணப் பெட்டிக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருஆபரணப் பெட்டியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி பிசாதமாக வழங்கப்பட்டதுதிருஆபரணப் பெட்டியுடன் கேரள மாநிலம் தேவசம் போர்டு ஆணையர் சுமங்கலா, அச்சன்கோவில் நிர்வாக அலுவலர் வினு, ஆலோசனைக்குழுத் தலைவர் சத்தியகீரன்பிள்ளை,  செயலாளர் உண்ணிகிரு~;ணன், துணைத் தலைவர் கோபி, புனலூர் டி.எஸ்.பி. கிரு~;ணகுமார் ஆகியோர் வந்திருந்தனர்

வரவேற்பு ஏற்பாடுகறை திருஆபரணப்பெட்டி வரவேற்புக்குழுத் தலைவர் ஹரிஹரன், நிர்வாகிகள் மாடசாமி சோதிடர், கூட்டுறவு மாரிமுத்து, ராமன், திருநாவுக்கரசு, முருகன்ராஜ், சுப்பாராஜ், ராஜகோபால் மற்றும் ஐயப்ப சேவாசங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சுரே~;குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று காலையில் கொடியேற்றத்துடன் மகோற்சவ விழா துவங்குகிறது. கோவில் முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மதியம் ஐயப்பனுக்கு சிறப்பு அபிசேகம் நடக்கிறது. பின்னர் திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.வரும் 24ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி ஆராட்டு விழாவும் நடக்கிறது. விழாவின் போது காலை, மாலை, இரவு அன்னதானம் வழங்ககப்படுகிறது. மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சி மற்றும் கருப்பன் துள்ளல் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து