ஆர்.கே.நகர் பள்ளிவாசல் அருகே சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் வாக்குசேகரிப்பு

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      தூத்துக்குடி
rk nagar vote canvass

ஆர்.கே. நகரில் மதுசூதனனை ஆதரித்து பள்ளிவாசல் அருகே  எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பு

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட செரியன் நகர் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வரும் இஸ்லாமியகளிடம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில்  அதிமுகவினர் இரட்டைஇலை சின்னத்தில்  வாக்கு சேகரித்தனர். இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.டி.நட்டர்ஜி எம்பி.  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,   முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் செம்பூர் டி.ராஜ்நாராயணன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏசாதுரை, புதுக்கோட்டை முருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் திருச்செந்தூர் ராமச்சந்திரன், சாத்தான்குளம் அச்சம்பாடு சௌந்திரபாண்டி,  தொண்டர்கள் பலர்  வாக்கு சேகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து