புதுவையில் அதிமுக பாசறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மாநில செயலாளர் செந்தில்குமரன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      புதுச்சேரி
medical camp

புதுவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கமாக அதிமுக இளம்பெண்-இளைஞர் பாசறை சார்பில் இலவச மருத்துவ முகாம் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர் சிங்காரவேலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

 மருத்துவ முகாமை அதிமுக பாசறை செயலாளர் செந்தில்குமரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், நாராயணசாமி, நிர்வாகிகள் தனராஜ், புவனேஷ், விநாயகமூர்த்தி, மதுரை, வேலு, லூர்து, ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, ஏழுமலை, எம்ஆர் சரவணன், ஜெ.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம்,எலும்பு சம்மந்தமான மருத்துவம் என அனைத்து நோய்களும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படடது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.அடுத்த கட்டமாக மருத்துவ முகாம் ஜனவரி மாதம் 6-ந் தேதி திருவள்ளுவர் நகரிலும், 17-ந் தேதி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் அருகிலும் ;நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து