கண்ணகிநகரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகள் மற்றும் பொருட்களை திருடிய 5 பேர் கைது

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      சென்னை

சென்னை, கண்ணநிகர், எழில்நகர், 24வது பிளாக், எண்.134 என்ற முகவரியில் முருகப்பன்,/36, /பெ.பழனியப்பன் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.

சிறையில் அடைப்பு

மாற்றுத் திறனாளியான முருகப்பனும், அவரது மனைவியும், சிறு வியாபாரம் செய்து வருகின்றனர். முருகப்பன் கடந்த 17.12.2017 அன்று இரவு மேற்படி வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன் அவரது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு, மறுநாள் 18.12.2017 காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 2 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.10,000/-, மேசை விசிறி மற்றும் பித்தளை பாத்திரம் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். பின்னர் முருகப்பன் இதுகுறித்து, கண்ணகிநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கண்ணகிநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன் விசாரணை செய்ததில், அப்பகுதியைச் சேர்ந்த நபர்களே மேற்படி குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.தங்கம் () தங்கராஜ், 2. சுரேஷ், அவரது தம்பி 3.சதீஷ் () ஆலா சதீஷ், 4.ராஜேஷ் ()பப்லு, 5.பார்த்திபன், ஆகிய 5 குற்றவாளிகளை நேற்று (19.12.2017) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து மேற்படி முருகப்பன் வீட்டில் திருடிய 2 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.10,000/-, மேசை விசிறி மற்றும் பித்தளை பாத்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கண்ணகிநகர் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் இருப்பதும், குற்றவாளி தங்கம் () தங்கராஜ், சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசாரால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து