முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதியம்புத்தூர், பசுவந்தனை, ஒட்டநத்தம், எஸ்.கைலாசபுரம் உள்ளிட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் கலெக்டர் என்.வெங்கடேஷ் ஆய்வு

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

புதியம்புத்தூர், பசுவந்தனை, ஒட்டநத்தம், எஸ்.கைலாசபுரம் உள்ளிட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றை கலெக்டர் என்.வெங்கடேஷ் நேரில் சென்று ஆய்வு செய்த பின் தெரிவித்ததாவது:

அடிப்படை வசதிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று புதியம்புத்தூர், பசுவந்தனை, ஒட்டநத்தம், எஸ்.கைலாசபுரம் உள்ளிட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில், ஆய்வு செய்து அங்குள்ள அடிப்படை வசதிகள், பொது பிரிவு, பிரசவம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், இரத்த பரிசோதனை ஆய்வகம், ஸ்கேன் அறை மற்றும் மருத்துவமனையின் வெளிப்புற சுகாதாரம், பராமரிப்பு, உள்நோயாளிகள் படுக்கை அறை, மற்றும் கழிப்பிட வசதி ஆகியவை முறையாக அனுதினமும் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்தகத்தில் போதிய அளவு மருந்துகள் இருப்பு குறித்தும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காலையும், மாலையும் இரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அதற்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கவும், அதற்கான மருந்துகள் போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேல்சிகிச்சை அளிக்கவும், காய்ச்சல் பாதிக்ப்பட்டவரின் தொடர் கண்காணிப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. - என  கலெக்டர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்கள்.

முன்னதாக கலெக்டர்  தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து, அலுவலகத்திற்கு தாமதமின்றி வருகைத்தர வேண்டும். அலுவலக வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து