நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 39 நபர்களுக்கு ரூ.7.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Agri Girvenceday nellai pro

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்சந்தீப் நந்தூரி,  தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 302 மனுக்களில் வேளாண்மையைச் சார்ந்த 178 மனுக்கள்  மற்றும் வேளாண்மை சாராத 124 மனுக்களுக்கும் பதில்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்கள்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ரூ.35 ஆயிரம் மானியத்தில் ஒரு விவசாயிக்கு ரோட்டோவேட்டர் இயந்திரத்தினையும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் குன்னத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த 36 ஏழை பெண்களுக்கு தலா ரூ.12,500/- மதிப்பிலான விலையில்லா ஆடுகளையும், இறைச்சி கோழி வளர்ப்பு மானியம் ஒரு நபருக்கு ரூ.2.68 இலட்சம் மானியத்திற்கான காசோலையினையும், நாட்டுக் கோழி வளர்ப்பு மானியம் ஒரு நபருக்கு ரூ.33 ஆயிரம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் 39 நபர்களுக்கு ரூ.7 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர்சந்தீப் நந்தூரி,  வழங்கினார்கள். தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்காக தயார் செய்யப்பட்ட துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது-

திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முடிய இயல்பான மழையளவைக்காட்டிலும் 271.25 மி.மீ அதிகமாக பெய்துள்ளது. நமது மாவட்டத்திலுள்ள 11 அணைகளிலும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இவ்வாண்டு, நீர் இருப்பு அதிகளவில் உள்ளது. ராபி பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது. 2016-17ம் ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிர்-ஐஐஐ காப்பீடு செய்த 18 விவசாயிகளுக்கு ரூ.0.51 இலட்சம், உளுந்து பயிர் காப்பீடு செய்த 20,205 விவசாயிகளுக்கு ரூ.48.64 கோடி இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இவை ஒரிரு தினங்களுக்குள் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மக்காச்சோளம் மற்றும் பசிப்பயிறு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 2017-18ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிர்-ஐஐல் 15,201 விவசாயிகள் 27,368 ஏக்கர் பரப்பில் நெல் பயிர் காப்பீடு செய்துள்ளனர். நெல் பயிர்-ஐஐஐ மற்றும் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நெல் பயிர்-ஐஐஐ , மக்காச்சோளம், சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயிறு மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு 15.02.2018க்குள்ளும், பருத்தி பயிறுக்கு 28.02.2018க்குள்ளும், கரும்பு பயிறுக்கு 31.10.2018க்குள்ளும் காப்பீடு செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் உரிய காலத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்.திருநெல்வேலி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை வருவாய் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களை கொண்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டு, 517 விவசாயிகளின் 130.60 ஏக்கர் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடாக ரூ.17.66 இலட்சம் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் பெறும் மனுக்களின் மீது அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பதில்களை வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர்சந்தீப் நந்தூரி,  பேசினார்கள்

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், வோண்மைத் துறை இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து