பவித்திரம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் 68 பயனாளிகளுக்கு ரூ. 2.60 லட்சம்: நலத்திட்ட உதவிகள் -தாசில்தார் ரவி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      திருவண்ணாமலை
photo04

 

திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 68 பயனாளிகளுக்கு ரூ. 2.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.ரவி வழங்கினார்.

அம்மா திட்ட முகாம்

திருவண்ணாமலை வட்டம் பவித்திரம் கிராமத்தில் ஆர்.சி.எம். தொடக்கப் பள்ளியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு தாசில்தார் ஆர்.ரவி தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் முருகன் , மண்டல துணை தாசில்தார் ப.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, வருவாய் ஆய்வாளர் ஆர்.விஜயகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், சிறு குறு விவசாய சான்று, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை நிலப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் 65 பேருக்கு சிறுகுறு விவசாய சான்றும், 3 பேருக்கு பட்டா மாற்றம் சான்றும் உள்ளிட்ட 68 பேருக்கு ரூ. 2.60 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.ரவி வழங்கினார்.

இந்த முகாமையட்டி கால்நடை துறை சார்பில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் (வெறையூர்) ராஜேஸ்வரி, தனிவருவாய் ஆய்வாளர் ச.விஜயரங்கன், கிராம நிர்வாக அலுவலர்கள் பி.ரூபா, வி.வித்யா உள்பட அரசு அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் எம்.மாதவன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து