தளி ஒன்றியத்தில் ரூ. 5 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      கிருஷ்ணகிரி

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்திற்குட்பட்ட பேளகொண்டப்பள்ளி, கொர்னூர், கெம்பட்டி,மதக்கொண்டப்பள்ளி, தேவகானப்பள்ளி, சாத்தனூர், அந்தேவனப்பள்ளி, குந்துகோட்டை, அஞ்செட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ. 5 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்று வரும் பாரத பிரதமர் கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் சாலை பணிகள், கனிமங்கள் நிதி ஆதார திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள், புதிய அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகள், புதிய கழிப்பறைகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் ஆழ்துளை கிணற்றை சுற்றி மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திட்டப் பணிகள்

முன்னதாக பேளகொண்டப்பள்ளி ஊராட்சியில் ஆழ்துறை கிணற்றை சுற்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதியிலிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகளையும், கலுகொண்டப்பள்ளி ஊராட்சியில் ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம்மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கான்கீரிட் சாலை பணிகளையும், ஆழ்துளை கிணற்றை சுற்றி ரூ. 30 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும், கொர்னுர் ஊராட்சி கெம்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை சுற்றி ரூ.30 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும், மதக்கொண்டப்பள்ளி ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ்யோனஜா திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடு கட்டுமான பணிகளையும், தேவகானப்பள்ளி முதல் சன்போகனப்பள்ளி வரை ரூ.44 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளையும், சாத்தனூர் ஊராட்சி முத்தூர் முதல் கர்நாடக எல்லை வரை ரூ. 72 ஆயிரம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளையும், ரூ. 29.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி புதிய கட்டிடம் கட்டுமான பணிகளையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து காரண்டப்பள்ளி ஊராட்சியில் பகலில் தெருவிளக்குகள் எரிந்த நிலையில் இருந்ததையடுத்து ஊராட்சி செயலர் பார்தீபன் என்பவருக்கு ரூ. 2000 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், ஒன்றிய பொறியாளர் சம்பத், உதவி பொறியாளர் சத்தியாநாரயாணராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து