கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாடுகள் சமூகநலத்துறை இயக்குநர் வே. அமுதவல்லி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      கடலூர்
cuddalure collector metting

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் பொருட்டு கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் சமூகநலத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு 26.12.2017 இன்று சமூகநலத் துறை இயக்குநர் வே. அமுதவல்லி   கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர்களுடன் திட்டம் தொடர்பாக கலந்தாலோசித்தார்.

ஆய்வு கூட்டம்

மேலும் அங்கு சிகிச்சை பெறும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்பிணி பெண்களிடம் பெண் குழந்தையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் அங்கு அமைக்கப்பட்ட திட்டம் குறித்தான விளம்பர பதகைகள் மற்றும்  சுவரோவியங்களை பார்வையிட்டனர்.மேலும், கடலூர் மாவட்ட அரசு சேவை இல்லம் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பயிலும் பெண் குழந்தைகள், அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள், கடலூர் நகர்புற காந்தி நகர் அங்கன்வாடி மையத்தில் பயன்பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உச்சிமேடு கிராமத்தில் உள்ள சுய உதவி குழுக்கள் மற்றும் அங்குள்ள பெண் குழந்தைகளை சந்தித்து கலந்தாலோசித்ததுடன் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்குழந்தைகளை பாதுகாப்பதற்கு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், கர்ப்பிணி (ம) பாலூட்டும் தாய்மார்கள் அவர்களது குடும்ப உறவினர்கள் பலருடனும் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வும் ஆலோசனையும் நடத்தப்பட்டது.பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, ,  முன்னிலையில் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தினை செயல்படுத்தும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் மேற்படி திட்டம் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் சிறப்பாக செயல்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறை இயக்குநர் வே.அமுதவல்லி, ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிகழ்வின்போது குழந்தைகள் நல இணை இயக்குநர் நந்திதா , மாவட்ட திட்ட அலுவலர் (விழுப்புரம்) அன்பழகி, கடலூர் மாவட்ட சமூகநல அலுவலர் பூங்குழலி, மற்றும் கடலூர் மாவட்ட திட்ட அலுவலர் பழனி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர்.எஸ்.மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் ஜவஹர்லால் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து