முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசம்பட்டியில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் பற்றிய கருத்தரங்கு: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டியில் வேளாண்மைத்துறை மற்றும் தேசிய வேளாண் பூச்சி ஆராhய்ச்சி அமைப்பு பெங்களுர் இணைந்து தென்னையில் பூச்சி மற்றும் நோய் பற்றிய கருத்தரங்கை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 27.12.2017) துவக்கி வைத்தார்.

கருத்தரங்கம்

இந்நிகழ்ச்சியில் பருவநிலைமாற்றமும், தென்னையில் பூச்சிகள்மற்றும் நோய்கள் குறித்து பேராசிரியர் மற்றும் தலைவர் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர் முனைவர் என். தமிழ்செல்வன், கருந்தலைபூழு ஒட்டுண்ணி உற்பத்தி மற்றும் கட்டுபாடு குறித்து என்.பி.ஏ.ஐ.ஆர். பெங்களுர் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஏ.வெங்கடேசன் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு கட்டுபாடு குறித்து என்.பி.ஏ.ஐ.ஆர் பெங்களுர் முதன்மை விஞ்ஞானி முனைவர் கே.சுபாகரன், தென்னை சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து முனைவர் கே.செல்வராஜ், தென்னையில் நோய் மேலாண்மை குறித்து முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜி.சிவகுமார், ஐ.கேர் வேளாண்மை அறிவியியல் மையம் முதல் நிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டி.சுந்தர்ராஜ் தென்னையில் நுன்னூட்டு சத்து பற்றாக்குறை பாதிப்புகள் குறித்தும், முனைவர் கே.குணசேகரன் தென்னையில் உர மேலாண்மை குறித்தும், முனைவர் ஜெ.முகமது ஜலாலுதீன் செதில் மற்றும் மாவு பூச்சி மேலாண்மை குறித்தும் செயல் விளக்கத்தோடு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், வேளாண் இணை இயக்குநர் கணேசன், துணை இயக்குநர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர் மற்றும் அரசம்பட்டி தென்னை உற்பத்தியாளர்கள் வளர்ச்சி சங்க தலைவர் எச்.என். சந்திரநாராயணன், துணை தலைவர் ஏ.சி. இளவரசன், பொருளாளர் வினய்கார்திக், தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து