சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேரோட்டம் 34 ஆண்டுகளுக்கு பின் நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      திருநெல்வேலி
sangaranarayanar temple therottam

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாள்  சிறப்பு அபிஷேகங்களும் , ஆராதனைகளும் அதனை தொடர்ந்து வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

விழாவின் 9ம் திருநாளை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் அதனை தொடர்ந்து, தேரில் சுவாமி-அம்பாள் வீற்றிருக்க விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 34 ஆண்டுகளுக்கு பின்னர் திருவாதிரை திருவிழாவில் விநாயகர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தேரோட்ட வீதியுலா கோவில் வாசலில் இருந்து கிளம்பி ரதவீதகள் வழியாக வந்து மீண்டும் கோவில் முன்பு முடிவடைந்தது. இதில் கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, சுவாமி ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், சைவ மரபினர் மகமை பொது சங்க செயலாளர் திருமலைக்குமார், சாரதிராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன், ஆசிரியர் ஆத்திவிநாயகம், திருவாவடுதுறை ஆதின ஆய்வாளர் சீத்தாராமன், கோவில் ஊழியர் கணேசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். 

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து