வீரமங்கை வேலுநாச்சியார் 288-வது பிறந்த நாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      சிவகங்கை
3 siva news

சிவகங்கை.-    இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்ட முதல் பெண்மணியும், தன்னிகரற்ற வீரத்தாய் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 288-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், சூரக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் ராஜூ,கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் , மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
             இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முருகானந்தம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.      
              விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீதாலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  கருப்பணராஜவேல், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) முகமது ரியாஸ் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து