நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      திருவள்ளூர்
nss camp

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; நிறைவு விழா நடைபெற்றது.

சிறப்பு முகாம்

விழாவில் நாட்டு நலப்பணி திட்ட தொண்டர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் இராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.மணவாளநகர்  கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சா.ஞானசேகரன் தலைமை தாங்கினார்.மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.கந்தசாமி முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட கூடுதல் ஒருங்கிணைப்பாளர் வ.ராமச்சந்திரன்.நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் கு.கேசவலு ஆகியோர் பங்கேற்று நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றுகள்,பரிசுகளை வழங்கினார்கள்.மணவாளநகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சே.பிரபாகரன் விழா நிறைவாக நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து