சாஸ்தாவழிபாடு புத்தகம் வெளியீட்டு விழா

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      வேலூர்
Dt   5 AKM  POTO   2

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில், ஸ்ரீசபரிமலை சாஸ்தா சபையின் 26ஆம் ஆண்டை முன்னிட்டு மருத்துவர் எஸ்.பன்னீர்செல்வம் பதிபித்த சின்முத்திரை சாஸ்தா வழிபாடு (நூல்) புத்தகம் வெளியீட்டு விழா வியாழன் மாலை நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் டிஆர்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

புத்ததகம் வெளியீடு

 

மருத்துவர் வாழவந்தாள், சீதாலட்சுமி கோவிந்தராஜ், புவனேஸ்வரி வெங்கட்டரமணன், ஆகியோர் குத்து விளக்கேற்றினர். ஸ்ரீசபரிமலை சாஸ்தா சபைநிர்வாகிகள் கோவிந்தராஜ், ரகுமேஸ்திரி, பாலாஜி, துரைசதீஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை காளிகாம்மாள் தேவஸ்தானம் பிரதம குருக்கள் தி.ஷா.காளிதாஸ் சிவாச்சாரியார் புத்தகத்தினை வெளியிட்டார் அதனை சென்னை காளிகாம்மாள் தேவஸ்தானம் அறங்காவலர்குழ தலைவர் மூர்த்தி பெற்றுக் கொண்டார். விழாவில் கலைமாமணி டிகேஎஸ்.கலைவாணன், ரோட்டரி சங்கத் தலைவர் பி.இளங்கோ, முருகன் லேப் ஜி.சுந்தர்ராஜ், நாவலர் இளையபாரதி, வாழ்த்தி பேசினார்கள். ஜி.மணி, திருமலை, சிஎம்.ஆதிமூலம், பிகே.பாலகணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈ.மாணிக்கவேலு தொகுத்து வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து