முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊத்தங்கரை வட்டத்தில் 56 ஆயிரத்து 770 நபர்களுக்கு ரூ.63 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மற்றும் கே.எட்டிப்பட்டி பகுதி நேர நியாயவிலைகடையினை முழுநேர நியாய விலைக்கடையாக திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்பினை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று ( 07.01.2018) வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் , சட்டமன்ற உறுப்பினர் நா.மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண் தலைமையும், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் க.பாண்டியன் வரவேற்புரையாற்றினார்கள்.பின்பு அமைச்சர் பேசுப்பொழுது:

பொங்கல் பரிசு

 தமிழக முதலமைச்சர் ஆணைப்படி பொங்கல் திருநாளை கொண்டுடாடும் வகையில் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 117 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2.11 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஊத்தங்கரை வட்டத்தில் மட்டும் 56 ஆயிரத்து 770 குடும்ப அட்டைகளுக்கு ரூ.63 லட்சத்து 58 ஆயிரத்து 240 மதிப்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதரார்கள், ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள், வன அட்டைதாரர்கள், மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டடி நீள கரும்பு துண்டு , 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், புடவை மற்றும் வேட்டிகள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

மேலும் கடந்த பொங்கல் தினத்தன்று கே.எட்டிப்பட்டி பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து பகுதி நேர நியாய விலைக்கடை தற்போது முழுநேர நியாய விலைக்கடையாக மாற்றப்பட்டு வாரம் 6 - நாட்களுக்கு அத்தியாவிசய பொருட்களை 528 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் வை.மு.ரவிசந்திரன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பா.சாகுல்அமீது, கூட்டுறவு சங்க தலைவர்கள். தேவேந்திரன், எஸ்.கணேஷ்குமார். வி.ரத்தினம், வேங்கன், ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர்கள் கண்ணன், திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சேட்டுகுமார், சங்கரநாராயணன், மற்றும் நாகராஜ், சக்திவேல், ரமேஷ், பி.கே.சிவாநந்தம், தனலட்சுமிகுப்புசாமி, பண்டரிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், வட்டாட்சியர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து