கிருஷ்ணகிரி அணை பூங்காவில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி: எம்.பி.கே.அசோக்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      கிருஷ்ணகிரி
1

 

கிருஷ்ணகிரி அணை பூங்காவில் பொங்கல் - சுற்றுலா கலை விழா 2018 நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகள் குறித்து (13.01.2018) அன்று அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.சாந்தி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் நா.மனோரஞ்சிதம்நாகராஜ், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புகைப்படக் கண்காட்சி

இ;ப்புகைப்படக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் 23.09.2017 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்பட கண்காட்சியில் பசுமை வீடு வழங்கும் திட்டம், மடிக்கனிணி வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுகள், மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள், திருமண நிதிவுதவி வழங்கும் திட்டங்கள், மகப்பேறு நிதிவுதவிகள் வழங்கும் திட்டங்கள், வறட்சி நிவாரணம், கால் நடைகளுக்கு உலர் தீவனம் வழங்குதல், ஏரிகள் தூர் வாருதல் என 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இக்கண்காட்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளுர் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள், விவசாய பெருமக்கள் என 2000 மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், பொதுபணித்துறை உதவிசெயற்பொறியாளர் குமார், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் மு.சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், சுற்றுலா அலுவலர் உமாசங்கர் கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து