தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இராமினஹள்ளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மாட்டு பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் திரு.C.காமராஜ் இயக்குனர், பால்உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை,சென்னை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
மாட்டு பொங்கல் திருவிழா
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் திரு.செல்வகுமார், ஆவின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் திரு.வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு கால் நடை தீவனம், தாது உப்பு கலவை இலவசமாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் கறவை மாடுகளுக்கு வழிபாடு செய்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதிக பால் உற்பத்தி வழங்கியோருக்கு பாசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆவின் உதவி பொது மேலாளர் டாக்டர்.P.குமரன்,மேலாளர் திரு.ரமேஷ் பாபு,சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை சங்கத்தலைவர் uh[Fkhரி காமராஜ் மற்றும் செயலர் திரு.கருணாகரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.