சென்னை பர்மாபஜாரில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டு பேர்களுக்கு ஆணையர்.விசுவநாதன் பாராட்டு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      சென்னை

சென்னை, பாரீஸ் கார்னர், பர்மாபஜார் பகுதியில் அப்துல்ரசீத், என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வியாசர்பாடியைச் சேர்ந்த அர்ஜுனன், என்பவர் வேலை செய்து வருகிறார்.

விசாரணை

 மேற்படி இருவரும் கடையிலிருந்த போது, கடையின் முன்புறம் உள்ள சாலையில் பணம் கிடந்துள்ளது. இதனை கவனித்த மேற்படி இருவரும் அதை எடுத்து எண்ணி பார்த்த போது மொத்தம் ரூ.50 ஆயிரம் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் அப்துல் ரசீத் வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சாலையில் கிடந்த பணம் ரூ.50 ஆயிரத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த அப்துல் ரசீது மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் .கா.விசுவநாதன், நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார். சாலையில் ரூ.50 ஆயிரத்தை தொலைத்த நபர்கள் பற்றி வடக்கு கடற்கரை ஆய்வாளர் விசாரணை செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து