முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி முதல் அத்திபள்ளி தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து தடுப்பு பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி

 

கிருஷ்ணகிரி முதல் அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் திம்மாபுரம், மோட்டுர், தண்டேகுப்பம், ஒரப்பம், கந்திகுப்பம், ராயக்கோட்டை மேம்பாலம் சந்திப்பு, புலியரசி, ஜீனுர்கூட்டு ரோடு, குரப்பரப்பள்ளி மற்றும் மேலுமலை (பிக்கனப்பள்ளி பிரிவு) உள்ளிட்ட இடங்களில் விபத்து தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ,ப. , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர்கள் (சேலம் - விழுப்புரம்) சிவாஜி, நாராயணன் (அத்திப்பள்ளி- வாலாஜா) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலை விபத்து தடுப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது:கிருஷ்ணகிரி மைய பகுதி சுற்றியுள்ள சாலைகளான சென்னை, சேலம், பெங்களுரு, தேசிய நெடுஞ்சாலைகள் அதிக போக்குவரத்து உள்ள நிலையில் விபத்துகள் கிருஷ்ணகிரி சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுகிறது. குறிப்பாக திம்மாபுரம், மோட்டுர், தண்டேகுப்பம், ஒரப்பம் கந்திகுப்பம், மேலுமலை ஆகிய பகுதிகளில் தேசியநெடுஞ்சாலைகளில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் சாலையை கடக்கும் பொழுதும் வாகன விதி மீறல்களாலும், விபத்துகள் ஏற்படுகிறது. அதுபோன்ற விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் காவல்துறை, தேசிய நெஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்பு மற்றும் தடுப்பு நடவக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேற்கண்ட 6- இடங்களில் சர்வீஸ் சாலைகளை அகலப்படுத்துவது, ஒருவழி சாலையாக மாற்றுவது சென்டர் மீடியேடர் அளவு உயர்த்துதல், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகைகள், ஒளிரும் விளக்குகள் அமைப்பது, சிக்னல் விளக்குகள் அமைத்தல், தேவையான இடங்களில் சப்வே அமைத்தல், மாற்று வழி ஏற்படுத்துவது, மேல் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் கலெக்டர் சி.கதிரவன் . தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.சாந்தி, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் உத்தண்டி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள். அசோகன், செந்தில்வேலன், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், எல்.என்.டி, நிறுவன மேலளார் ஸ்ரீதர், பொறியாளர் சிவகுமார், உதவி இயக்குநர் ( நெடுஞ்சாலை) கவிதா, மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து