முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சிப்பாறை அணையை ஆழப்படுத்த ரூ.156 கோடி ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி: குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையை பலப்படுத்தி ஆழப்படுத்த ரூ.156 கோடி ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தாணுப்பிள்ளை, ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார். குமரி மாவட்டத்தில் அதிமுகவில் சுமார் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், கழக நிர்வாகிகள் தாங்கள் சார்ந்த பகுதியிலுள்ள பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூறி நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக விமான நிலையம், முக்கடல் அணை நீர்மட்டத்தை 15 அடி உயர்த்துதல், உலக்கை அருவி குடிநீர் திட்டம், தாடகை மலை, பொய்கை அணை, தடுப்பணை கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப் பாடுபடும் மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி க்கு நன்றி தெரிவித்து, ஓகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை 20 லட்சம் வழங்கியதற்கும், கடலில் காணாமல் போன மீனவர்கள் இறந்த 7 ஆண்டுக்குப் பிறகு தான் இறந்ததாக கருதப்படும் என்ற அரசின் சட்டத்தை 3 மாதங்கள் என திருத்தி ஆணைப் பிறப்பித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் நன்றி தெரிவித்தும், பேச்சிப்பாறை அணையை பலப்படுத்த ரூ.52 கோடியும், தூர்வார ரூ.104 கோடியும் ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட நிறைவில் நகர செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து