வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லதா பார்வையிட்டு ஆய்வு

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      சிவகங்கை
Collector latha -7 2 18 0

 சிவகங்கை.-சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நீடித்த நிலையான மானாவாரி விவசாயிகளுக்கான இயக்கத் திட்டத்தின் மூலம் மணலூரில்; தடுப்பணை முடிவுற்ற பணிகளையும், மேலும், பொன்னம்பட்டி கிழவயலில் மானாவாரி மேம்பாட்டு குழுவின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்  வாடகை மையத்தில் ரோட்டோவேட்டர், சுழல் கலப்பை, பவர்டில்லர், ஒன்பது கொழுக் கலப்பை, போன்ற இயந்திரங்களைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகள் இயந்திரங்களை வெளி இடங்களில் வாடகைக்கு வாங்கி பயன்படுத்துவதற்கும், அரசு உதவி பெற்று செயல்பட்டு வரும் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடும் மையத்தின் மூலமாக வாங்கி பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் செலவினங்களின் விவரங்களை என்னவென்று அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
             மேலும், தோட்டக்கலைத் துறையின் மூலம் பொன்னடபட்டி காய்கறி மற்றும் மரங்களில் மகரந்தச் சேர்க்கையினை ஊக்குவித்து அதிக மகசூலைப் பெறுவதற்கு தேனீ வளர்ப்பு மற்றும் தரம் பிரித்து சந்தை விற்பனைக்கு சிப்பம் கட்டும் அறைகளையும், பின்னர், மணியாரம்பட்டியில் சொட்டு நீர் பாசனம் தொழில்நுட்பத்தின் கீழ் அடர் மா நடவு செய்யப்பட்டுள்ளதைப் பார்வையிட்டும், வாராப்பூரில் பந்தல் சாகுபடி முறையில் ஊறுகாய் வெள்ளரி உற்பத்தி செய்வதையும் பார்வையிட்டார்.
            அதனைத் தொடர்ந்து, எஸ்.புதூரில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் அரசு உதவி பெற்று இயங்கி வரும் நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணையினை ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கோழி வளர்ப்பு குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடமிருந்து பராமரிப்பு முறைகள் குறித்து தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்டறிந்தார்.
            மேலும், குளத்துப்பட்டியில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் கூட்டுப்பண்ணையம் அமைத்து விவசாய உறுப்பினர்கள் மூலம் காய்கறிகளை மொத்த கொள்முதல் செய்தல், கொள்முதல் செய்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி கூட்டாக சேகரித்து நேரடியாக விற்பனை செய்து அதிகமான லாபம் ஈட்டும் வகையில் கூட்டுப்பண்ணையத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பெறுவதற்கு வழிமுறைகளையும் மற்றும் துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார்.
          பின்னர், பொன்னடபட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, கேட்டறிந்தார்.
           இந்த ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் செல்வம், கால்நடைப் பராமரிப்;புத்துறை மண்டல இணை இயக்குநர் கருணாகரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அழகுமலை, வேளாண் பொறியில் துறை உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து