டீசல் விலை தினமும் உயர்வால் சுற்றுலா வாகன வாடகையை உயர்த்த உயர்வு: நலச் சங்க கூட்டத்தில் முடிவு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      சேலம்
slm

 

டீசல் விலை தினமும் உயர்வால் வாடகை சுற்றுலா வாகன வாடகையை உயர்த்த வாகனஉரிமையாளர்கள் நலர்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கட்டணம் உயர்வு

சேலம் மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் வாடகை நிர்ணய ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணி முன்னிலை வகித்தார். வாகன உதிரி பாகங்களின் விலையேற்றம், இன்சூரன்ஸ் காப்பீட்டு ஏற்றம், டீசல் விலை தினமும் ஏற்றம், எலக்ட்ரிக்கல், போன்றவைகள் மற்றும் டோல்கேட் கட்டண உயர்வுர், ஜிஎஸ்டி போன்ற வரிகளால் வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை சுற்றுலாவாடகை வாகனர்களில் ஸ்பீடோ மீட்டர் பொருத்துவதை கண்டித்தும், 8 மணி வேலை நேரம் புதிய வாடகையை நிர்ணயிப்பது உள்ளிட்டவை குறித்தும் கூ ட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் செயலாளர் கண்ணு பையன், அன்பழகன், உள்ளிட்ட ஏராளமான அனைத்து வகை சுற்றுலா வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து